- நல்லெண்ணெய்
- கற்பூரவல்லி இலை
- சர்க்கரை
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
- மகிழம்பூ
- சோம்பு
- ரோஜாபூ
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
- வேப்பம் பட்டை
- கடுக்காய்
- கோரைக் கிழங்கு
- வேப்பம் பட்டை.
- கடுக்காய்
- கோரைக் கிழங்கு.
- நிலவேம்பு.
- தேன்.
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக